சிறிது நாட்களுக்கு முன்பு நானும் எனது நண்பரும் லண்டனுக்கு ஏற்றுமதி
வியாபாரம் சம்பந்தமாக சென்றிருந்தோம் . லண்டன் வேலை முடிந்த்தவுடன்லண்டனிலிருந்து அப்படியே ஜப்பான் செல்வதற்காக லண்டன் ஏர்போட்டில் அமர்ந்திருந்தோம்.
எங்களது விமானம் புறப்பட சிலமணி நேரம் தாமதமாகும் 
என்ற காரணத்தால் பொழுதை போக்க அங்கே இருந்த பல நாட்டு 
அழகிகளை ரசித்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுதுஎதேட்ச்சையாக பின்னால் திரும்பி பார்த்தேன்.அங்கே எங்கேயோ பார்த்தமுகமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்பொழுது மீண்டும் அவரை கூர்ந்து கவனித்தேன். எனதுமகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அட இவரா! என்று புல்லரித்துப்போனேன்.
அவரிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.
சரி பேசித்தான் பார்ப்போமே என்று அவரை நெருங்கினேன்.
தயக்கத்துடன் அவர் அருகில் நின்றேன்.அவர் சட்டென்று என்னை 
கவனித்தவராக சிரித்தார். 
நானும் சிரித்தவாறே ''நானும் தமிழ் நாடுதான் சார்'' 
என்றேன்.
''ஒ அப்படியா நைஸ்'' என்றார்.
'' நீங்க இங்க வேல பாக்குறீங்களா'' என்று கேட்டார்.
''இல்லீங்க சார் நானும் எனது நண்பரும் பிசினஸ் 
சம்பந்தமா வந்தோம்'' என்றேன்.
அவர் ''ஒ அப்படியா என்ன பிசினஸ்'' 
''சார் நாங்கள் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ்'' என்று சொன்னேன் .
''ஒ வெரி குட்'' என்று சொன்னார். 
நான் ''சார் நன் உங்கபடங்களை விரும்பி பார்ப்பேன் சார் 
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்'' என்றேன்.
அவர் ''ஒ வெரி குட் வெரி குட்'' என்று என் தோள்களை தட்டிக்கொடுத்தார்.
அப்பொழுது நான் அடிக்கடி பினால் திரும்பி பார்ப்பதை பார்த்து ''என்ன அடிக்கடி பின்னால் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். 
''சார் என்னோட நண்பனும் என்னுடன் வந்திருக்கான்'' சார் என்றேன்.''அதோ அங்க உட்கார்ந்திருக்கிறார்''.என்றேன்.
''அவர் உங்க பிரண்டையும் வரச்சொல்லுங்களேன்'' என்றார்.
நான் நண்பனிடம் ஓடிச்சென்று 
''டேய் சார் உன்ன கூப்புடுராருடா'' என்றேன். 
அது வரை அந்த நீக்ரோ கேர்ள்ஸை 
சைட் அடித்துக்கொண்டிருந்தவன் என்னைப்பார்த்து ''யார்ற அந்தா சார்'' என்றான்.
என்னைப்பார்க்கும் பொழுதே அவரையும் பார்த்துவிட்டு எரிச்சலுடன் என்னை பார்த்து 
''ஒழுங்க போ என்னை தொந்தரவு செய்யாதே நான் சைட் அடிக்க வேண்டும்'' என்றான்.
அவனுக்கு தமிழ் நடிகர்களை பிடிக்கவே பிடிக்காது. -- அவர்களின் முதலமைச்ச்சர் கனவை--
நான் வற்புறுத்தி அழைத்ததால் வேண்டா வெறுப்பாக என்னுடன் அவரை சந்திக்க வந்தான்.
''சார் இவன்தான் தான் என்னுடைய பிரண்ட் சிவா'' என்று அறிமுகப்படுத்தினேன்.
அவர் ''ஹாய் சிவா'' என்றார். அதற்கு அவன் ''ஹை சார்'' என்றான். 
என்னிடம் திரும்பி ''சார் யாருன்னு சொல்லலியே''? என்றான்.
நான் ஆரம்பிச்சுடாண்டா என்று நினைத்துக்கொண்டு
''சார் இவன் இப்படித்தான் சார் சும்மா விளையாடுவான் தப்பா எடுத்துக்காதீங்க'' 
என்றேன். இறுகிப்போயிருந்த அவர் சிறு புன்னகையுடன் ''ஒ'' என்று 
சிரித்தார். 
சிவா அவரை உற்றுப்பார்த்து விட்டு ''சார எங்கயோ பாத்தமாதிரி
இருக்கே என்று யோசித்தவாறே ''ஆங் ஞாபகம் வந்துடுச்சு சார் நீங்க தான
96 தேர்தல்ல ஜெயலலிதாவுக்கு எதிரா வாய்ஸ் கொடுத்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா ஆண்டவனால கூட தமிழ் நாட்ட காப்பாத்த முடியாதுன்னு சொன்னீங்க
அப்புறமா 2001 தேர்தல்ல மறுபடியும் ஜெயலலிதாவுக்கு ஆதரவா வாய்ஸ் 
கொடுத்தீங்க இப்ப ஞாபகம் வந்துடுச்சுங் சார்.நான் தமிழ் சினிமா அதிகம் 
பாக்கறதில்லேங்க சார். அதனாலதான் உங்கள டக்குனு ஞாபகப்படுத்த 
முடியல்ல'' என்றான். ''அப்புறம் எங்க சார் இப்பவெல்லாம் உங்க வாய்ச கேக்க முடியல'' என்றான். அவரின் முகத்தில் ஈ ஆடவில்லை. 
''நான் சாரிங்க சார், சாரிங்க சார்'' என்றவாறே சிவாவை 
இழுத்துக்கொண்டு சென்றேன்.
 
No comments:
Post a Comment