இப்பொழுதுதான்   சாருவின் நந்தலாலா   விமர்சனத்தை  
உயிர்ம்மையில்    படித்தேன்.''நந்தலா   கிக்குஜிரோவின்   
தழுவல் அல்ல, அதன் ஒன் லைனை மட்டுமே  எடுத்துக் 
கொண்டு புதிதாக நந்தலாலாவை     மிஷ்கின் 
உருவாக்கியிருக்கிறார் எந்திரனை போலவோ அல்லது  
யோகியை போலவோ கள்ளப்பிரதி  கிடையாது என்கிறார்''. 
நான் இன்னும்கிக்குஜிரோவைபார்க்கவில்லை. பார்ததவர்கள் 
சொன்னது   ''கிக்குஜிரோவில்  எப்படி கேமரா கோணங்கள் 
உள்ளதோ  அதே போலவே நந்தலாவிலும் இருப்பதாக''.எனது 
வாதமெல்லாம் ஏன் அந்த ஒன் லைனையும் நாமே சொந்தமாக 
யோசிக்க முடியாதா?.  அந்த ஒன் லைன்  க்கு கூட  நம்மக்கு 
சிந்தனை  பஞ்சமா? என்பதே . தமிழில் எத்தனையோ சொல்ல 
வேண்டிய  காத்திரமான  கதைகள் உள்ளனவே . அதையெல்லாம் 
விட்டு விட்டு ஏன் இப்படி என்றுதான் புரியவில்லை. 
மேலும் எனக்கு நந்தலாலா  இயல்பாக எடுக்கப்படவில்லை  
என்று தோன்றுகிறது. ஒவ்வொரு காட்சியும்    இது  உலக 
சினிமாவுக்கான சவால் என்று காட்டுவதற்காகவே எடுக்கப்பட்டது 
என்று தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பு என்பது  
வலிந்துஉருவாக்கப்பட்டதாக இருக்ககூடாது. இயல்பாக 
உருவானதாகஇருக்கவேண்டும். எப்படிஆரம்பத்தில் சைக்கிள் 
கற்றுக்கொள்ளும் போது இரண்டு சக்கரங்களில் 
மட்டுமே போகிறோம்  ஆகையால் ஜாக்கிரதையாக 
இருக்கவேண்டும் அல்லது சைக்கிள்  ஓட்டுகிறோம் என்ற 
எண்ணம் இருந்து  கொண்டே இருக்கிறதோ, அதை போல அல்லாமல்  நன்றாக சைக்கிள்   ஓட்டகற்றுக்கொண்ட பிறகு  சைக்கிள்   ஓட்டும் போது நாம் சைக்கிள் 
ஒட்டிக்கொண்டு கொண்டுதான்  இருக்கிறோம்என்ற 
உணர்வில்லாமலேயே  வேறு சிந்தனைகளிலும் கூட 
ஓட்டுகிறோமோ  அதைப்போல இருக்கவேண்டும். ஆனால் 
நந்தலாலா அப்படி இல்லை. 
மேலும் சாரு, நந்தலாலா இசையை பற்றி சொல்கிறார்.
 படத்தில் இசை பாதி  நன்றாக உள்ளது .மீதி சரி இல்லை 
என்று,என்னுடையகருத்து  படத்தில் இசை முழுவதுமாகவே 
சரியில்லை என்பதே. இதற்கு  இளையராஜாவை சாரு குற்றம் 
சாட்டுகிறார்.அது தவறு. இசைக்கும் படத்தின்  படைப்பாளியான 
இயக்குனரே பொறுப்பாவர் என்பத என்னுடைய வாதம் .படத்தில் 
ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும்  எப்படி இயக்குனர் 
நடிக்கவைக்கிறாரோ, நடிப்பு தான் நினைத்ததை போல 
வரவில்லைஎன்றால்  மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லிககொடுக்கிராரோ  அதைப்போல 
இசையையும் தான் விரும்பியபடி  கொண்டுவரவேண்டும் .
தன் அதாவது இயக்குனரின்  விருப்பபடி இசையமைக்க  
இசையமைப்பாளரின் ஈகோ இடம்கொடுக்கவில்லை என்றால் 
அந்த இசையமைப்பாளரை படத்தில் இருந்து 
நீக்க வேண்டியது இயக்குனரின் கடமையல்லவா?.
ஒருசினிமாவைமறுபடியும் சினிமாவாக மறு உருவாக்கம்
செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது .அப்படியே தவறு
இல்லை என்று வைத்துக்கொண்டாலும் இப்பொழுது அப்படி
என்ன அவசரம் வந்தது?. அந்தபடத்தின் ஒன்லைனை எடுத்துக்கொள்வதர்க்கு இங்கு ஏராளமாக சொல்லப்பட
வேண்டி ஒன் லைன்கள் கொட்டிக்கிடக்கிறதே.என்
வரையில் சாரு போன்ற நல்ல விமர்சகர்கள் இப்படத்தை
நிராகரிப்பதன் மூலமே அசல் தமிழ் படைப்புகளை மிஷ்கின்
போன்ற நல்ல படைப்பாளிகள் சினிமாவாக செய்வதற்கு வழிவகுக்கமுடியும்.
 
No comments:
Post a Comment