அன்று இரவு  2  மணி அளவில் ல.சா.ரா வின் ''அபிதா'' 
நாவலை படித்துக்கொண்டிருந்தேன். தூக்கம் கண்ணை 
சுழற்றியது.நாவலை அப்படியே புக் மார்க் செய்து மூடி 
வைத்துவிட்டு தூங்கிப்போனேன்.
ரஜினியின் வீட்டில் நான் நுழைந்த பொழுது அங்கே 
ரஜினி பெங்களூரிலிருந்து வந்திருந்த தனது நண்பர்களுடன்
உரையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த 
ஒருவர் கேட்டார்,'' என்ன ரஜினி நீங்க நடக்கறதையெல்லாம்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்களா?'' என்று.
அதற்க்கு ரஜினி,'' என்ன சொல்றீங்க? எதைப்பற்றி சொறீங்க?
என்று கேட்டார்.அதற்கு நண்பர்,'' இல்ல, இந்த விஜய்
காங்கிரஸ்ல போய் சேர்ந்து அரசியல்ல நுழைய முயற்சி
பண்ணினார்.பிறகு அது சரிவரவில்லை என்றவுடன்  ஆ தி மு க 
வில் சேர முயற்சி பண்றதா சொல்லிக்கிறாங்க ம்...
இப்படி உங்களுக்கு பல காலத்துக்கு பின்னாடி சினிமாவுக்கு
வந்தவன் இப்பொழுது  அரசியலிலும் நுழைந்து முதலமைச்சராஆகறதுக்கு 
திட்டம் போட்டுக்கிட்டு இருக்கான். ஆனால் 
நீங்களோ உச்சத்தில் இருந்து கொண்டு இருக்கிறீர்கள்.நீங்கள்
இப்படியே யோசனை செய்து கொண்டுஇருந்தீர்கள் என்றால் 
விஜய் முதலமைச்சர் ஆனாலும் ஆகி விடுவான். அப்படி 
ஆகி விட்டால் உங்கள் இமேஜ் என்ன ஆகும்? யோசித்துப்பாருங்கள்.''
என்றார்.  
அதற்க்கு ரஜினி  , '' ஓ அதப்பத்தி சொல்றீங்களா
அதைத்தான் நானும் தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.
என்ன பன்னருதுனே ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.விஜயகாந்த் 
என்னடாதுனா திடீர்ன்னுகட்சிய   ஆரம்பிச்சு
யாரு கூடவும் கூட்டணி சேர மாட்டேன்னு சொல்லி ஒரு 
பெரிய மாஸ உருவாக்கிக்கிட்டு இருக்காரு. விஜய் பைய்யன் 
வேற முதலமைச்சர் ஆகியே தீருவதுன்னு அலையறான்.
இவனுங்க இப்படியே பன்னுனானுங்கன்ன நான் என்னதான் 
பண்ணறதுன்னே தெரியல.வயசும் ஆகிக்கிட்டே இருக்குது.யோசனை பண்ணுறேன்.''   
உடனே ரஜினியின் மற்றொரு நண்பர் சொன்னார் 
, '' இப்படி யோசனை பண்ணிக்கிட்டு இருக்குறதுல எந்த பிரயோசனமும் இல்ல. வரப்போற தேர்தல்ல விஜய் ஆ தி மு க வுக்கு பிரச்சாரம்பண்ணுனா நீங்க எந்த ஒரு யோசனையும் செய்யாம தி மு க வுக்கு
ஆதரவா வாய்ஸ் கொடுக்கறதுதான் நல்லது. உங்களுக்கு தான் 
வாய்ஸ்கொடுக்கறது கைவந்த கலையாயிற்றே.
மறுபடியும் கலைஞர்முதலமைச்சர் ஆகிட்ட விஜய் பயல நடிக்கவே விடாம பண்ணிடுவாரு.முடிஞ்சா தமிழ் நாட்ட விட்டே துரத்தி விட்ட்ருவாறு.அப்புறம் 
விஜயகாந்த் கட்ச்சியும் ஒண்ணுமே இல்லாம போய்டும். விஜையகாந்த் கட்ச்சியில இருக்குறவங்கல்லாம் காட்ச்சிய விட்டே போயிடுவாங்க 
இதன் மூலமா விஜயகாந்தையும் ஓரம் கட்டிடலாம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா. இல்ல. இல்ல. மூன்று மாங்கா கலைஞர் ஜெயிச்சுட்ட விஜய்
சினிமாவிலேயே இருக்கமுடியாது.விஜயகாந்த் கட்சி இருக்கவே இருக்காது.
அப்புறம் ஜெயலலிதாவ கேக்கவே வேண்டாம்  அதிகாரத்துல இல்லைனா 
அவுங்க ரொம்ப மூட் அவுட் ஆகிடுவாங்க. அவங்க கட்சியில இருக்கறவங்கல்லாம் 
தேர்தல்ல செலவு பண்ணியும் , ஆர்பாட்டம் பாணியும், கூட்டம் 
சேர்க்கவே செலவு செஞ்சே ஓட்டாண்டி ஆகிடுவாங்க. தி மு க வுல சேர்ந்துடுவாங்க. அழகிரி சொல்லறமாதிரி ஆ தி மு க வே இருக்காது.
so ,  unga  imaja  காப்பாத்திக்கனுமுனா நீங்க வரப்போற தேர்தல்ல 
கலைங்கருக்கு ஆதராவா வாய்ஸ் கொடுக்கறதுதான் நல்லது.
அப்புறமா கலைங்கருக்கு பிறகு நீங்க அரசியலுக்கு வர்ரதுனாலும் 
வரலாம் இல்லைனா அப்படியே இருந்தர்ரதுனாலும் இருந்துக்கலாம்.''.
அதற்க்கு ரஜினி , '' வெரி குட்.  வெரி குட் . நல்ல ஐடியா அப்படியே செஞ்சுடாலாம்'' என்று உற்ச்சாகத்துடன் புளு லேபில் ஜானி வாக்கரை  கையிலெடுத்தார்.
 
No comments:
Post a Comment