சிறிது நாட்களுக்கு முன்பு நானும் எனது நண்பரும் லண்டனுக்கு ஏற்றுமதி
வியாபாரம் சம்பந்தமாக சென்றிருந்தோம் . லண்டன் வேலை முடிந்த்தவுடன்லண்டனிலிருந்து அப்படியே ஜப்பான் செல்வதற்காக லண்டன் ஏர்போட்டில் அமர்ந்திருந்தோம்.
எங்களது விமானம் புறப்பட சிலமணி நேரம் தாமதமாகும் 
என்ற காரணத்தால் பொழுதை போக்க அங்கே இருந்த பல நாட்டு 
அழகிகளை ரசித்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுதுஎதேட்ச்சையாக பின்னால் திரும்பி பார்த்தேன்.அங்கே எங்கேயோ பார்த்தமுகமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்பொழுது மீண்டும் அவரை கூர்ந்து கவனித்தேன். எனதுமகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அட இவரா! என்று புல்லரித்துப்போனேன்.
அவரிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.
சரி பேசித்தான் பார்ப்போமே என்று அவரை நெருங்கினேன்.
தயக்கத்துடன் அவர் அருகில் நின்றேன்.அவர் சட்டென்று என்னை 
கவனித்தவராக சிரித்தார். 
நானும் சிரித்தவாறே ''நானும் தமிழ் நாடுதான் சார்'' 
என்றேன்.
''ஒ அப்படியா நைஸ்'' என்றார்.
'' நீங்க இங்க வேல பாக்குறீங்களா'' என்று கேட்டார்.
''இல்லீங்க சார் நானும் எனது நண்பரும் பிசினஸ் 
சம்பந்தமா வந்தோம்'' என்றேன்.
அவர் ''ஒ அப்படியா என்ன பிசினஸ்'' 
''சார் நாங்கள் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ்'' என்று சொன்னேன் .
''ஒ வெரி குட்'' என்று சொன்னார். 
நான் ''சார் நன் உங்கபடங்களை விரும்பி பார்ப்பேன் சார் 
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்'' என்றேன்.
அவர் ''ஒ வெரி குட் வெரி குட்'' என்று என் தோள்களை தட்டிக்கொடுத்தார்.
அப்பொழுது நான் அடிக்கடி பினால் திரும்பி பார்ப்பதை பார்த்து ''என்ன அடிக்கடி பின்னால் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். 
''சார் என்னோட நண்பனும் என்னுடன் வந்திருக்கான்'' சார் என்றேன்.''அதோ அங்க உட்கார்ந்திருக்கிறார்''.என்றேன்.
''அவர் உங்க பிரண்டையும் வரச்சொல்லுங்களேன்'' என்றார்.
நான் நண்பனிடம் ஓடிச்சென்று 
''டேய் சார் உன்ன கூப்புடுராருடா'' என்றேன். 
அது வரை அந்த நீக்ரோ கேர்ள்ஸை 
சைட் அடித்துக்கொண்டிருந்தவன் என்னைப்பார்த்து ''யார்ற அந்தா சார்'' என்றான்.
என்னைப்பார்க்கும் பொழுதே அவரையும் பார்த்துவிட்டு எரிச்சலுடன் என்னை பார்த்து 
''ஒழுங்க போ என்னை தொந்தரவு செய்யாதே நான் சைட் அடிக்க வேண்டும்'' என்றான்.
அவனுக்கு தமிழ் நடிகர்களை பிடிக்கவே பிடிக்காது. -- அவர்களின் முதலமைச்ச்சர் கனவை--
நான் வற்புறுத்தி அழைத்ததால் வேண்டா வெறுப்பாக என்னுடன் அவரை சந்திக்க வந்தான்.
''சார் இவன்தான் தான் என்னுடைய பிரண்ட் சிவா'' என்று அறிமுகப்படுத்தினேன்.
அவர் ''ஹாய் சிவா'' என்றார். அதற்கு அவன் ''ஹை சார்'' என்றான். 
என்னிடம் திரும்பி ''சார் யாருன்னு சொல்லலியே''? என்றான்.
நான் ஆரம்பிச்சுடாண்டா என்று நினைத்துக்கொண்டு
''சார் இவன் இப்படித்தான் சார் சும்மா விளையாடுவான் தப்பா எடுத்துக்காதீங்க'' 
என்றேன். இறுகிப்போயிருந்த அவர் சிறு புன்னகையுடன் ''ஒ'' என்று 
சிரித்தார். 
சிவா அவரை உற்றுப்பார்த்து விட்டு ''சார எங்கயோ பாத்தமாதிரி
இருக்கே என்று யோசித்தவாறே ''ஆங் ஞாபகம் வந்துடுச்சு சார் நீங்க தான
96 தேர்தல்ல ஜெயலலிதாவுக்கு எதிரா வாய்ஸ் கொடுத்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா ஆண்டவனால கூட தமிழ் நாட்ட காப்பாத்த முடியாதுன்னு சொன்னீங்க
அப்புறமா 2001 தேர்தல்ல மறுபடியும் ஜெயலலிதாவுக்கு ஆதரவா வாய்ஸ் 
கொடுத்தீங்க இப்ப ஞாபகம் வந்துடுச்சுங் சார்.நான் தமிழ் சினிமா அதிகம் 
பாக்கறதில்லேங்க சார். அதனாலதான் உங்கள டக்குனு ஞாபகப்படுத்த 
முடியல்ல'' என்றான். ''அப்புறம் எங்க சார் இப்பவெல்லாம் உங்க வாய்ச கேக்க முடியல'' என்றான். அவரின் முகத்தில் ஈ ஆடவில்லை. 
''நான் சாரிங்க சார், சாரிங்க சார்'' என்றவாறே சிவாவை 
இழுத்துக்கொண்டு சென்றேன்.
Friday, December 24, 2010
Monday, December 20, 2010
என்னைக்கவர்ந்தது
சமீபத்தில் நான் வாசித்த கட்டுரைகளில் என்னைக்கவர்ந்தது திரு. ஜெயமோகனின் ''மாவோயிச வன்முறை'' கட்டுரை. 
அதற்க்கான சுட்டிகள் கீழே
http://www.jeyamohan.in/?p=10748
http://www.jeyamohan.in/?p=10751
http://www.jeyamohan.in/?p=10761
http://www.jeyamohan.in/?p=10782
அதற்க்கான சுட்டிகள் கீழே
http://www.jeyamohan.in/?p=10748
http://www.jeyamohan.in/?p=10751
http://www.jeyamohan.in/?p=10761
http://www.jeyamohan.in/?p=10782
Thursday, December 2, 2010
கனவு வேட்டை
நேற்று இரவு தான் இன்செப்சன்   என்ற படத்தை பார்க்க நேர்ந்தது.ஒன்றும் புரியவில்லை. மீண்டும் பார்க்கவேண்டும்என்ற எண்ணத்துடன்  படுக்கையில் சாய்ந்தேன் 
அப்படியே தூங்கிப் போன்னேன்.
 திடீரென  நான்  முதலமைச்சர் முத்தமிழ் வித்தகர்  கலைஞர் கருணாநிதின் வீட்டில் அவருடைய பேரன்களான உதயநிதி ஸ்டாலின்
 மற்றும் தயாநிதி அழகிரி மற்றும் .அருள்நிதி  ஆகியோருடன் ஒன்றாக உணவு மேஜையின் அருகில் அமர்ந்திருந்தேன். வழக்கமாக கலைஞர்   அவர்கள் கரச்சோரும் நாங்கள் அனைவரும் மட்டன் 
பிரியாணியும் சாப்பிட ஆரம்பித்தோம்
அப்பொழுது  கலைஞர் சொன்னார் ''பேராண்டிகளா  நீங்கள்தமிழ்  சினிமா தயாரித்து கொண்டு இருக்கிறீர்கள் சந்தோசம்  ஆனால் அதுமட்டும் பத்தாது''. 
உடனே பேரன்கள் ''என்ன தாத்த சொல்றீங்கக் வேறு என்ன பண்ணறது நாங்கநடிக்கவா  முடியும்'' என்று கேட்டார்கள். 
''ஆமாண்டா பேரங்க்களா நடிக்கத்தான்  வேண்டும் இல்லையான  எனக்கப்புறம்
 நீங்க என்ன ஆவீங்கன்னே தெரியாது.''
 ''என்ன தாத்தா''    சொல்லுறீங்க
''ஆமாண்டா இப்ப பாரு விஜய் காங்கரசுல சேர்ந்து முதலமைச்சர் ஆவருதுக்கான  பிளான  போடுறான்   நம்ம தமிழ் நாட்டு  ஜனங்கள பத்தி உங்களுக்கு தான் தெரியுமே சினிமாவுல எவன்ஒருத்தன்   நடிக்கரானோ அவன் சொல்லறதுதான் இவங்களுக்கு வேதவாக்கு. நடிகனுங்க தான  இந்த மக்களுக்கு சிந்தனையாளருங்க  ரச்சகருங்க   எல்லாமே ஆகையால  மக்கள் என்ன பண்ணுவாங்க நடிகனுங்க என்ன சொல்லறாங்களோ அல்லது தேர்தல் நேரத்துல யாருக்கு வாய்ஸ் கொடுக்கராங்க்களோ அவங்களுக்குதான் ஒட்டு போடுவாங்க.அதனால தான்  சொல்லுறேன் தயவு  செய்து எப்படியாவது  ஹீரோ ஆயிடுங்க . நானும் எப்படியாவது இந்த தேர்தல்ல பிரிட்ஜ் கம்ப்யூட்டர்னு கொடுத்து  ஜெயிச்சுடறேன் அப்புறம் வர்ற  அஞ்சு    வருசத்துல தம்பி உதயநிதி விஜய்யோட எடத்துலயும் தயாநிதி தம்பி அஜித்  தோட எடத்தையும் புடுச்சுட்டீங்க்கனா   விஜய்யையும் அஜீத்தையும் வீட்டுக்கு அனுப்பிடலாம் உங்க எதிர்காலத்துக்கும்   எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கும்''. 
''தாத்தா  அப்போ ரஜினி''   
''ரஜினியபத்தி யாரும் கவலைப்பட  வேண்டாம்   அவருக்குராமதாசு  
தேர்தலோட அவரு கட்சியில இருக்குற தொண்டருங்களெல்லாம் நம்ம  கட்ச்சில  சேர்ந்துடுவாங்க. அவங்களுக்கும் வேற என்ன வழி இருக்குஅவங்க   எல்லாம்  என்ன  நாட்டுக்கு நல்லது பண்ணனுமுன்னா   விஜயகாந்து   கட்ச்சில சேந்தாங்க.  
''அப்புறம் ஜெயலிதா ஆன்டிய   எப்படி   தாத்தா சமாளிக்கறது.''.
 அட பேரன்டிங்க்களா அந்தம்மா  ஆண்டி  இல்ல டா  பாட்டி  அந்த  அம்மா   அதிகாரத்துல இல்லீன பயித்தியம் புடுசாப்புல ஆயிருவாங்க   அதுவும் தொடர்ந்தது பத்து வருசமா அதிகாரத்துல இல்லினா அவ்வளவுதான். அவங்கள பத்தி கவலையே படாம    இருங்க.நடிகைகளுக்கு  வயசாயிடுச்சுனா  தமிழ்  ரசிகனுங்க  மத்தில 
இருக்காரு அவரு பாத்துக்குவாரு.விஜயகாந்த    பத்தி பிரச்சனை இல்ல இந்த  மதிப்பு  இருக்காது .அப்புறம்     நீங்க தான் பெரிய நடிகர்கள் ஆகப்போரீங்களே  அப்புறம் என்ன கவலை. நீங்க தான்  தமிழ் நாடு மக்களுக்கு மீட்பர்கள் இரட்சகர்கள்  எழுத்தார்கள்   சிந்தனைவாதீகள் எல்லாமே    நீங்கதான்   ஆகையால நீங்க யாருக்கு  ஓட்டு போட சொல்லுறீங்களோஅவர்களுக்கு   தான் ஓட்டு போடுவாங்கv
'அப்புறம் ராகுல் காந்திய  எப்படி   தாத்தா சமாளிக்கிறது'' 
''அததாண்ட பேராண்டிகளா நானும் யோசுச்சுக்கிட்டே இருக்கறேன் என்னோட இத்தன வருஷ அரசியல் வாழ்க்கயில இதுக்குத்தான் இன்னும் விடையே யோசிக்க முடியல. யோசிக்கறேன்''.
(ல.ச. ராமாமிர்தத்தின் அபிதா  naavalai    காலையில் சீக்கிரமாக எழுந்து படிக்க வேண்டும் என்பதற்காக காலை நான்கு மணிக்கு நான் வைத்த அலாரம் கேட்டு விழித்துக்கொண்டேன்.)
வேட்டை தொடரும் ...  
Wednesday, December 1, 2010
நந்தாலாலவை பற்றி சாருவை முன்வைத்து
இப்பொழுதுதான்   சாருவின் நந்தலாலா   விமர்சனத்தை  
உயிர்ம்மையில்    படித்தேன்.''நந்தலா   கிக்குஜிரோவின்   
தழுவல் அல்ல, அதன் ஒன் லைனை மட்டுமே  எடுத்துக் 
கொண்டு புதிதாக நந்தலாலாவை     மிஷ்கின் 
உருவாக்கியிருக்கிறார் எந்திரனை போலவோ அல்லது  
யோகியை போலவோ கள்ளப்பிரதி  கிடையாது என்கிறார்''. 
நான் இன்னும்கிக்குஜிரோவைபார்க்கவில்லை. பார்ததவர்கள் 
சொன்னது   ''கிக்குஜிரோவில்  எப்படி கேமரா கோணங்கள் 
உள்ளதோ  அதே போலவே நந்தலாவிலும் இருப்பதாக''.எனது 
வாதமெல்லாம் ஏன் அந்த ஒன் லைனையும் நாமே சொந்தமாக 
யோசிக்க முடியாதா?.  அந்த ஒன் லைன்  க்கு கூட  நம்மக்கு 
சிந்தனை  பஞ்சமா? என்பதே . தமிழில் எத்தனையோ சொல்ல 
வேண்டிய  காத்திரமான  கதைகள் உள்ளனவே . அதையெல்லாம் 
விட்டு விட்டு ஏன் இப்படி என்றுதான் புரியவில்லை. 
மேலும் எனக்கு நந்தலாலா  இயல்பாக எடுக்கப்படவில்லை  
என்று தோன்றுகிறது. ஒவ்வொரு காட்சியும்    இது  உலக 
சினிமாவுக்கான சவால் என்று காட்டுவதற்காகவே எடுக்கப்பட்டது 
என்று தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பு என்பது  
வலிந்துஉருவாக்கப்பட்டதாக இருக்ககூடாது. இயல்பாக 
உருவானதாகஇருக்கவேண்டும். எப்படிஆரம்பத்தில் சைக்கிள் 
கற்றுக்கொள்ளும் போது இரண்டு சக்கரங்களில் 
மட்டுமே போகிறோம்  ஆகையால் ஜாக்கிரதையாக 
இருக்கவேண்டும் அல்லது சைக்கிள்  ஓட்டுகிறோம் என்ற 
எண்ணம் இருந்து  கொண்டே இருக்கிறதோ, அதை போல அல்லாமல்  நன்றாக சைக்கிள்   ஓட்டகற்றுக்கொண்ட பிறகு  சைக்கிள்   ஓட்டும் போது நாம் சைக்கிள் 
ஒட்டிக்கொண்டு கொண்டுதான்  இருக்கிறோம்என்ற 
உணர்வில்லாமலேயே  வேறு சிந்தனைகளிலும் கூட 
ஓட்டுகிறோமோ  அதைப்போல இருக்கவேண்டும். ஆனால் 
நந்தலாலா அப்படி இல்லை. 
மேலும் சாரு, நந்தலாலா இசையை பற்றி சொல்கிறார்.
 படத்தில் இசை பாதி  நன்றாக உள்ளது .மீதி சரி இல்லை 
என்று,என்னுடையகருத்து  படத்தில் இசை முழுவதுமாகவே 
சரியில்லை என்பதே. இதற்கு  இளையராஜாவை சாரு குற்றம் 
சாட்டுகிறார்.அது தவறு. இசைக்கும் படத்தின்  படைப்பாளியான 
இயக்குனரே பொறுப்பாவர் என்பத என்னுடைய வாதம் .படத்தில் 
ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும்  எப்படி இயக்குனர் 
நடிக்கவைக்கிறாரோ, நடிப்பு தான் நினைத்ததை போல 
வரவில்லைஎன்றால்  மீண்டும் மீண்டும் நடிக்க சொல்லிககொடுக்கிராரோ  அதைப்போல 
இசையையும் தான் விரும்பியபடி  கொண்டுவரவேண்டும் .
தன் அதாவது இயக்குனரின்  விருப்பபடி இசையமைக்க  
இசையமைப்பாளரின் ஈகோ இடம்கொடுக்கவில்லை என்றால் 
அந்த இசையமைப்பாளரை படத்தில் இருந்து 
நீக்க வேண்டியது இயக்குனரின் கடமையல்லவா?.
ஒருசினிமாவைமறுபடியும் சினிமாவாக மறு உருவாக்கம்
செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது .அப்படியே தவறு
இல்லை என்று வைத்துக்கொண்டாலும் இப்பொழுது அப்படி
என்ன அவசரம் வந்தது?. அந்தபடத்தின் ஒன்லைனை எடுத்துக்கொள்வதர்க்கு இங்கு ஏராளமாக சொல்லப்பட
வேண்டி ஒன் லைன்கள் கொட்டிக்கிடக்கிறதே.என்
வரையில் சாரு போன்ற நல்ல விமர்சகர்கள் இப்படத்தை
நிராகரிப்பதன் மூலமே அசல் தமிழ் படைப்புகளை மிஷ்கின்
போன்ற நல்ல படைப்பாளிகள் சினிமாவாக செய்வதற்கு வழிவகுக்கமுடியும்.
Subscribe to:
Comments (Atom)
