Tuesday, November 30, 2010

ஆசான் சாருவுக்கு ஒரு கடிதம்.

எங்களுக்கெல்லாம் சிந்திக்க கத்துக்கொடுத்த சாருவுக்கு வணக்கம்.நந்தலாலா   பற்றிய உங்களின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் வைத்துப்பார்க்கும் பொழுது  நீங்கள்     நந்தலாலா படத்தை பாராட்டுவதாக தோன்றுகிறது.(இன்னும் உயிர்ம்மையில் உங்ககளின் விமர்சனம்   படிக்கவில்லை.
நீங்கள் , ஜெயமோகன் ஏதோ ஒரு மேடையில் இயக்குனர் மணிரத்தினத்தை   புகழ்ந்து பேசியதை கண்டித்து ஏதோ நீங்கள் தான் ''பாரதியின் வாரிசு'' என்ற  தோரணையிலும், சமரசமின்மையின்   மறு உருவமாகவும்   இருப்பதாக பேசி வரும்  நீங்கள் எப்படி நந்தலாலா படத்தை ஒரு கிளாசிக் என்று சொல்லலாம்?. இது ஒரு   ஜப்பானிய படத்தின் தழுவல் என்று உங்களுக்கு தெரியாதா?. அப்படியே    ஹாலிவுட் படத்தை தழுவி   எடுக்கப்பட்ட எந்திரனை   சாடிய நீங்கள் எப்படி நந்தாலாலவை மட்டும் கிளாசிக் என்று சொல்ல முடிகிறது? . என்னை பொருததவரையில் எந்திரன்   கூட பரவாயில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும்   என்ற  ஒரே நோக்கத்திற்காக எடுக்கப்பட்டதால் அது வேறு ஒன்றை தழுவி எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் நந்தலா அப்படியா ஒரு அறிவார்ந்த படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள படைப்பாளி ஒரு படத்தை   சுட்டு எடுத்துள்ளார். டைட்டிலில் கூட இதைப்பற்றி மிஷ்கின் ஒரு வார்த்தை கூறவில்லை. இது எவ்வளவு   பெரிய அயோக்கியத்தனம்    என்று உங்களூக்கு தெரியவில்லையா?.   ஒரு கமர்ஷியல் இயக்குனர் ஒரு படத்தை சுட்டு எடுப்பதற்கும்   ஓர் தீவிரமான சினிமாவை தரப்போகிறேன் என்று கூறிக்கொண்டு ஒரு படத்தை தழுவி எடுத்து விட்டு மேலும் தழுவி எடுக்கப்பட்ட படத்தை பற்றி    ஒன்றுமே கூறாமல் அந்தப்படத்தின் டைரக்டருடன் சேர்ந்து அமர்ந்து  நந்தலாலவை பார்க்க வேண்டுமென்று  கூறி  வரும் மிஷ்கினுக்கு என்ன  ஒரு தடித்தனம் இருக்கவேண்டும். சரி, ஒரு வாதத்திற்கு  இது அந்த ஜப்பானியபடத்தின்   ஒரு ''இம்ப்ரஸ்''   மட்டுமே மற்றபடி அதன் காட்சிகள்    வேறு இதன் காட்ச்சிகள் வேறு என்று கூறினாலும், ஒரு அசலான ஒரு சினிமா எடுக்க நினைக்கும் மிஷ்கினை சுற்றி உங்களை போல் பல சிறந்த எழுதாளர்களிருக்கிரார்களே!   அவர்களை வைத்து   ஏன்  ஒரு அசலான படைப்புகளை தரமுடியவில்லை. இதுதான்  எனக்கு ஒரு புரியாத puthiraakave      இருக்கிறது. அதாவது தமிழ் மொழியில்   கமர்சியல் படம் எடுப்பவரும்  சரி,  தீவிர சினிமா எடுப்பவரும்  சரி ஏன் வேற்று மொழிபடங்கலையே    நாட வேண்டியிருக்கிறது.

தயவு செய்து   நீங்கள்   தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் . .உங்களுக்கு இருக்கும் பிரபலமே போதுமானதாக உள்ளது. அதாவது உங்கள் முகம் தமிழ்  நாட்டில் அனைவருக்கும்   தெரியவேண்டும் என்ற உங்கள் எண்ணம் புரிகிறது . . அதனாலேயே நீங்கள் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக தோன்றுகிறது, பாருங்கள் ஒரு படத்தில்  நடிக்க வாய்ப்புகிடத்துள்ளதால் அவ்வாய்ப்பை   கொடுத்த  இயக்குனரின் படத்தை பாராட்ட வேண்டியுள்ளது. இது தேவையா?. முன்பு போலவே சமரசமில்லாத விமர்சகனாகவே   இருங்கள். பாரதியைப்போல. தமிழ்  எழுத்தாளனுக்கு மட்டுமில்லை  என்னை போன்ற இளைங்கர்களுக்கும்   முன்னுதாரணமாக   இருங்கள்.

சுட்டபழம் மிஷ்கினுக்கு ஒரு கடுதாசி

 
ஒலக மகா ஆட்டக்காரா  சாரி டைரடக்கரே நீங்க பெரிய தில்லாலங்கடிதான். படம் எடுக்கறதில இல்ல படத்த சுடரதுல்ல.இங்க உருப்படியா விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்கிறது சாரு மட்டுந்தான் அவருக்கே அல்வாகுடுத்துட்டிங்களே .அந்த ஆளுக்கு நடிக்கனுமுன்னு இருந்த  ஆசைய பயன்படுத்திக்கிட்டு உங்க படத்துல நடிக்க வெச்சுப்புட்டீங்க. அப்புறம் எப்படி சாரு வால உங்களோட இந்த ''சுட்டு எடுத்த படமான நந்தலாலவ'' விமர்சனம் பண்ண முடியும்?. அப்படியே ஜெயமோகனையும் கூட்டிப்போய் படத்த போட்டு காமுச்சுப்புட்டீங்க. அந்தாளும் அடுத்தபடத்தில வசனம் எழுத கூப்புடுவாரு அப்படின்னு படம் சூப்பருங்கறாரு. அப்படியே மனுஷ மூத்திரன் சாரி மனுஷ புத்திரன், பெரபஞ்சன், பாவம் செல்லதுர, போன்ற சினிமா அறிவு சீவிகளையும் ஏதோ சொக்குபொடி போட்டு படத்த பாராட்ட வெச்சுப்புட்டீங்க.
 
அப்புறம் உங்க பேட்டியே இசை அருவியிலே பாத்தனுங்க. கொன்னுபுட்டிங்க. அப்படியே தமிழு டைரக்டருங்க எப்படி பேசுவாங்களோ அப்படியே பேசிப்புட்டீங்க. பிரசவநீங்க , உங்களோட அல்லக்கைகள குழந்தநீங்க .ஒன்ன  உட்டுடீங்க. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி   ''சாப்பாட்டுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் எத்தனைநாள்  பட்டிணியிருந்தேன்''   இதெல்லாம் சொல்லமருந்துபுட்டீங்க. பரவால்ல சீக்கிரமே விகடன்ல ''இவன்தான் மிஷ்கின்னு''   ஒரு தொடர் எழுத கூப்புடுவாங்க  இதே எல்லாத்தையும்  மறக்காம சொல்லிபுடுங்க டைரடக்கரே.(ஒரு அறிவார்ந்த   படைப்பாளி பேசற மாதிரியா இருந்தது உங்க பேச்சு).
இப்ப லேட்டாயிடுச்சு  மிச்சத்த அடுத்த கடுதாசியில சொல்லறேன்.

Friday, November 26, 2010

நந்தலாலா

இயக்குனர் மிஷ்கின்  பற்றிய  உயர்வான எண்ணம்  என்  மனதில் எலதிரு .சாருநிவேதிதாஅவர்களே காரணம்."நான் முப்பது நாற்பது வருடங்க
ளாக உலகசினிமாவு உலக இலக்கியமும் படித்துவருகிறேன்ஆனால் இந்த வயதில்உலக  இலக்கியத்தில் மிஷ்கின் என்னை விட அதிகம் தெரிந்தவராக  இருக்கறார் "என்று சாரு எழுதியிருந்தார் ஆகையால் நானும் மிஷ்கினைப் பற்றி உயர்வான எண்ணமே  கொண்டிருந்தேன். ஒரு தீவிரமான சினிமாவை மிஷ்கின் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். ஆகையால் நந்தலாலாவை பற்றி    எனக்கு  எதிபார்ப்பு  அதிகம் இருந்தது. ஆனால்!


நந்தலாலா ஏதோ ஒரு ஜப்பானிய படத்தின் தழுவல் என்று கேள்விப்பட்டவுடனேயே ''பக்'' என்றது. தன்னை சுற்றி இத்தனை சிறந்த எழுத்தாளர்களை வைத்துக்  கொண்டு இருக்கும் மிஷ்கின்  எதற்காக வேறு நாட்டு படத்தை நாடிப் போக வேண்டும்தழுவி    எடுக்க வேண்டும். படம் பார்க்கும் முன்னமே இந்த செய்தி  கேள்விப்பட்ட வுடன்  எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. படம் பார்த்த   எனக்கு மிகமிக எரிச்சலூட்டியது படத்தில் வரும் இசை. ஐயோ என்ன ஆச்சு இளையராஜாவுக்கு ''வயசு ஆச்சு .''. தயவு செய்து இளையராஜா ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.

படம் ஏதோ  குறியீடு  தளத்தில்  இருப்பதாக ஜெயமோகன் வேறு பினாத்துகிறார். தாயை தேடிய பயணத்தில் ஜீவாத்மா    பரமாத்மாவை தேடுவதை போல உங்களுக்கு தோன்றுகிறதா  ஜெயமோகன்?. உலக இலக்கிய மற்றும் சினிமா அறிவை மிஷ்கின் கொண்டுள்ளார் எனபது உண்மையாக   இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளியாக  மிஷ்கின் சைபர். மிஷ்கின் தயவு செய்து நீங்கள் உங்களின் முந்தைய படங்களைப்போல  போல சண்டைப்படங்களை  எடுங்கள்.நீங்கள் எடுக்கும் குத்துப்பாடல்கல்   அருமையாக உள்ளன. அதையே தொடர்ந்து செய்யுங்கள். அடுத்த முறை இதைப்போல முயற்சி செய்தால் தயவு செய்து அசலான படைப்புக்களையே  கொடுங்கள் எதையும் தளுவாதீர்கள்.

கடைசியாக இளையராஜாவுக்கு ஒன்று இதைப்போல இசை அமைத்து உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்ளதீர்கள். ''கொஞ்சநஞ்ச இருந்த மானத்தையும் இவன் கெடுத்துட்டான்'' என்று கவுண்டமணி  செந்திலை ப்பார்த்து  கூறுவதைப்போல படத்தில் இருந்த கொஞ்ச நஞ்சம் சிறப்புக்களையும் இசைஞானி கெடுத்துவிட்டார்.